போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஆர் நகர் சந்திப்பில் கொடுங்கையூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீஸ்காரர் உத்தரகுமார் மடக்கி பிடித்தார். அதன்பிறகு முக கவசம் அணியாமல் வந்த குற்றத்திற்காக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வாலிபருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வாலிபர் போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்ததும் அருகில் இருந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வியாசர்பாடி புதுநகர் பகுதியில் வசிக்கும் சட்ட கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அப்துல்ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.