சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீன மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் புதிதாக 100க்கும் மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சென்ற சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொற்று பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 100க்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கின்ற செய்தியானது சீன மக்கள் அனைவரையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜின்ஜியாங்கின் வடமேற்கு பகுதியில் 89 நபர்களும், வடகிழக்கு மாகாண லியோனிக்கில் 8 நபர்களும் மற்றும் பெய்ஜிங்கில் ஒரு நபரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்பியுள்ள மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பதாக உறுதியாகியுள்ளது. ஜின்ஜியாங்கிற்கு வெளியில் சீனாவின் மற்ற இடங்கள் அனைத்திலும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருக்கின்றது. சீனாவில் தற்போது வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 84 ஆயிரத்து 60 ஆக இருக்கின்றது. மேலும் 4,634 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால் சீன மக்கள் அனைவரும் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.