Categories
உலக செய்திகள்

இதுக்கு முடிவே இல்லையா….? குரங்கம்மையே கட்டுப்படுத்த எளிய வழிமுறை…. WHO எச்சரிக்கை….!!

குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள உலக சுகாதார அமைப்பு இயக்குனர் கூறினார். 

குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி கே சிங் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மை பரவலாக பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நோய் பற்றிய தகவல்களை நிபுணர்கள் உடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறுஆய்வு செய்து வருகின்றது. உலக அளவிலும், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது. இந்த குரங்கம்மை  பரவல் தொடங்கியதிலிருந்து உலக சுகாதார நிறுவனம் பல நாடுகளுக்கும் ஆதரவை வழங்கி வருகின்றது.

இந்த குரங்கம்மை பரவலை தடுத்து நிறுத்த முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து  நாம் செய்யும்போது எவ்வித பாகுபாடு இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குரங்கம்மை வைரஸ் பாதித்தவருடன் உடலுறவு மற்றும் நெருங்கி பழகுதல் போன்றவை காரணமாக இன்னொருவருக்கு முதன்மையாக பரவுகிறது. மேலும் நோயாளி பயன்படுத்திய ஆடைகள், படுக்கை, மின்சாதன பொருட்கள் போன்றவற்றில் தொற்று ஏற்படுத்தக்கூடிய தோல் செதில்கள் இருக்கக்கூடும். அவை மூலம் இன்னொருவருக்கு குரங்கம்மை வைரஸ் பரவும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |