பெரம்பலூரில் பெற்றோர் திட்டியதால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி (17) என்ற மகள் இருந்தார். இவரை பெற்றோர் வீட்டு வேலைகளை சரியாக செய்யுமாறு கூறி திட்டியுள்ளனர். இதனால் கோடீஸ்வரி மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அவரது பெற்றோர் கோடீஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். சிறுமி இறந்த செய்தியைக் கேட்ட அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.