Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு காரணமானவங்கள கைது பண்ணுங்க..! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு போராட்டம்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் தலைமை தாங்கி நடத்தினார். நிர்வாகிகள் முருகன், திருச்சித்தன், அன்பரசு, மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் பேசினார். அப்போது அரக்கோணத்தில் நடைபெற்ற அர்ஜுனன், சூர்யா ஆகியோரின் படுகொலையை கண்டித்தும், அதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

அதே போல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பழனி பேருந்து நிலைய ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Categories

Tech |