Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதில் கையெழுத்து போடு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…!!

மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்களா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்மணியும், மங்களாவும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் தந்தையிடமும், இளையமகன் தாயிடமும் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு தமிழ்மணி மங்களாவை வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு மங்களா மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் படுகாயமடைந்த மங்களாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மங்களா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |