சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வில் கொரோனாவிற்கு எதிராக மலேரியா, முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும் உதவியளிக்கிறது என தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இருக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் கொரோனா குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் povidone-iodine மற்றும் hydroxychloroquine மருந்துகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு மருந்துகளும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் மிக எளிதில் கிடைக்கக் கூடியவை என்பதால் அதை பயன்படுத்தி இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆய்விற்கு சிங்கப்பூரில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள இந்தியா, வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தாமாக முன்வந்து பங்கேற்றுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி இல்லாத 21 முதல் 60 வயதுக்குட்பட்ட 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் hydroxychloroquine, povidone-iodine ஆகிய 2 மருந்துகளையும் எடுத்துகொண்ட 54% பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்னர். இந்த மருந்துகள் கொரோனா வைரஸ் நுழைவதற்கு முக்கிய வழியான தொண்டையை மிகவும் பாதுகாப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த மருந்தை கொண்டு கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.