Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இதான் டார்கெட்..! சாமர்த்தியமாக காய் நகர்த்தும் பாஜக… தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு …!!

36 எம்எல்ஏக்கள் நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம். இவை தவிர சில சுயேச்சை எம் எல் ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் தான் ஆட்சி நிலைக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் வழங்கிவந்த மகா விகாஷ் அகாடி  என்ற பெயரில் காங்கிரஸ் –  சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணிக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியிருக்கிறார்கள்.

முக்கியமாக காரணம் நாங்கள் தான் உண்மையான சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். பெரும்பான்மையானவர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என்ற விஷயத்தை சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட தகுதிநீக்க நோட்டீஸ்சுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது. அனைத்துமே கைமீறிப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது. இன்னொரு பக்கம் இவர்கள் மீதான நடவடிக்கை என்பதையும் சிவசேனா கட்சி மேற்கொண்டிருக்கிறது. இவை அனைத்துக்குமான கேள்வி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போதுதான் தெரியும்.

இந்த வழக்கில் 16 சட்டமன்ற உறுப்பினர்களும் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறதா ?  ஒருவேளை இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா ? ஆனால் அவ்வாறு நடக்குமா அல்லது சிவசேனா கட்சியும் மகாராஷ்டிரா அரசையும் ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றுவாரா ? அடுத்தடுத்து வரக்கூடியது  சுவாரஸ்ய நிகழ்வுகளாக பார்க்க வேண்டியிருக்கிறது. இதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே முழு ஆதரவையும் பாஜகவிற்கு கொடுக்கும் பட்சத்தில் மஹாராஷ்ராவில் பாஜக ஆட்சி அமையும் என பாஜகவினர் குஷியாக, அம்மாநில அரசியல் நகர்வை உற்று நோக்குகின்றனர்.

Categories

Tech |