Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இதான் கடைசி தொடர்…! விலகும் கேப்டன் கோலி…. புது முடிவாலும் ரசிகர்கள் ஷாக் ..!!

வர இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அண்மையில் தெரிவித்தார். நீண்ட அறிக்கை மூலம் விராத் கோலி தனது கருத்தை பகிர்ந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஒரு வீரனாக செயல்படுவேன் என்றும், ஒருநாள் போட்டி – டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுத்து இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிக்கை மூலம் தெரியப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரோடு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அவர் ஆர்சிபி அணியின் கேப்டனாக இது எனது கடைசி ஐபிஎல் தொடர்,  என்னை ஆதரித்த அனைத்து ஆர்சிபி ரசிகர்களுக்கும் நன்றி என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனை ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உறுதி செய்துள்ளது.

Categories

Tech |