தியேட்டர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் தாக்குதலால் மரிய போல் நகரில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து இருக்கும் சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் தியேட்டர் ஒன்றில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தியேட்டர் முழுவதும் உருக்குலைந்த நிலையில் அங்கு இருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில் தியேட்டரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது.
மேலும் உக்ரைனிய போராளிகளான அசோவ் பட்டாலியன் அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கக் கூடும் எனவும் ரஷ்யா கூறியுள்ளது. ஏற்கனவே உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக அந்நாட்டு மக்களை போராளிகள் குழு தடுப்பதாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.