Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதற்கெல்லாம் இழப்பீடு வழங்கப்படும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் ராமு விவசாயிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராமு  பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீற்றம், புயல், வெள்ளம், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை போன்றவற்றால்   பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் திட்டத்தில் வாழை மரங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2,525 ரூபாயும், மரவள்ளிக்கிழங்கு இருக்கு 1,020 ரூபாய் வரையும் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள்  ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரம், ஆகியவற்றுடன் கூட்டுறவு சங்கத்தை தொடர்புகொண்டு இத் திட்டத்தில் இணையலாம் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |