Categories
உலக செய்திகள்

இதற்கு வாய்ப்பே இல்லை…. இந்தியா -பாகிஸ்தான இடையே போக்குவரத்து…. அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும் பிரபல நாட்டிற்கும் இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை என அந்நாட்டு மந்திரி கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 2  நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்ட  விமானங்கள் , ரயில்கள், பேருந்துகள் என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தற்போது 3  ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுகுறித்து  அந்நாட்டு   போக்குவரத்து துறை மந்திரி கூறியதாவது. 2 நாடுகளுக்கும்  இடையே  போக்குவரத்து மீண்டும் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என தெளிவாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |