Categories
தேசிய செய்திகள்

இதற்கு பான் எண் கட்டாயம் இல்லை…… நிதியமைச்சகம் திடீர் முடிவு…. வெளியாகும் முக்கிய அறிவிப்பு….

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சிலவகையான நிதி பரிமாற்றங்களுக்கு பான் கார்டு எண் அவசியமில்லை என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் சிலவகையான பண பரிமாற்றங்களுக்கு இனி பான் கார்டு எண் கேட்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் கருதுகின்றது.

வங்கி கணக்குகள் பெரும்பாலும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்ட நிலையில் பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்கிவிடலாம் எனவும் வருமானவரித்துறை சட்டத்திலும் சில வகை பரிமாற்றங்களுக்கு பான் எண்ணுக்கு பதில் ஆதார் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இத்தகைய பரிந்துரையை ஏற்று நிதி அமைச்சகம் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |