Categories
அரசியல்

இதற்கு தண்டமாக சம்பளமா ? சீட்டு, பல்லாங்குழி விளையாடுறாங்க…. புரணி பேசுறாங்க…. சீமான் காட்டம் …!!.

மனித உழைப்பை உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சோம்பி இருக்கவைத்து அவர்களுக்கு கூலி கொடுக்கிறது என்பது மிக ஆபத்தான போக்கு என 100நாட்கள் வேலை திட்டத்தை சீமான் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கணும் என்றால் எப்படி ஒழிக்கணும். திரும்பத் திரும்ப உங்களுக்கு பதிவு பண்றேன், மனித ஆற்றலை… மனிதனை திறனை உழைப்பில் ஈடுபடுத்தி உற்பத்தியை பெருக்கி லாபத்தை ஈட்டுகிற நாடு எதுவோ அது தான் வாழும் வளரும்.

மனித உழைப்பை உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சோம்பி இருக்கவைத்து அவர்களுக்கு கூலி கொடுக்கிறது என்பது மிக ஆபத்தான போக்கு. இப்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் நீங்கள் 200 ரூபாய் கொடுங்கள் அல்லது 150 ரூபாய் கொடுங்கள் 300 ரூபாய் கூட கொடுங்கள்..நானும், எங்க அம்மா, என் அக்கா நாங்கெல்லாம் விவசாயம் பார்க்கிறோம் என்றால் எங்க தோட்டத்தில் வேலை செய்ய வருபவர்களுக்கு 500 ரூபாய் கொடுக்கிறோம்.

அது பத்தாது அப்படி என்றால் நீங்கள் அரசு ஒரு 200 ரூபாய் கொடுக்கிறீர்களே… அதையும் அந்த உடல் உழைப்பை அங்கே செலுத்துங்கள். வேளாண்மையில் ஈடுபடுத்துங்கள், உழைப்பை அங்கு கொண்டுபோய் கொட்டுங்கள், இந்தாங்க கூடுதலாக ஒரு 200 ரூபாய் ஊக்கத் தொகை என்றால் அது ஆக்கபூர்வமானது. இங்க வேளாண்மைக்கு ஆளே வரவில்லையென்றால் நீங்கள் வேளாண்மை வளர்த்தெடுப்பதுக்கு…  வேளாண்மைக்கு தனி பட்ஜெட் எதுக்கு ?

விவசாயத்திற்கு ஆளே இல்லை, அப்புறம் எங்க போய் தனி நிதி நிலை அறிக்கை என்ன வரப்போகிறது. அது ஏமாற்று வேலை தானே. சரி நீங்கள் இத்தனை ஆண்டுகள் ஆகிடுல்ல… கிராம பஞ்சாயத்தில் ஊரக 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்து எத்தனை மரக்கன்றுகள் நட்டு வளர்த்து உள்ளீர்கள், இந்நேரத்தில் எத்தனை கோடி மரங்களை நட்டிருக்கலாம், எத்தனை ஏரிகளை தூர்வாரி உள்ளீர்கள், எத்தனை குளங்களை தூர்வாரி உள்ளீர்கள்

எத்தனை பாதைகளை சீரமைத்து உள்ளீர்கள்,  இந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது நாங்கள் மண் அள்ளிபோட்டு சரி பண்ணியுள்ளோம் என்று ஒன்று காட்டுங்களேன், ஒரு புகைப்படம் எடுத்து போடுங்களேன், ஒன்றுமே கிடையாது.  கூடி அமர்ந்து சீட்டு விளையாடுவது, பல்லாங்குழி விளையாடுவது, புரணி பேசுவது, இதற்கு தண்டமாக சம்பளம். இதெல்லாம் ஒரு வளர்கின்ற நாடு ஒரு ஏழ்மை நாடு 80கோடி ஏழைகள் என நிதி அமைச்சரே பேசுகிறார்.

அப்படி ஏழ்மை வறுமையில் மக்களை வைத்துக்கொண்டு உழைப்பில் இருந்து வெளியேற்றி,  சும்மா 100 ரூபாய்… 200ரூபாய் தருகிறேன் என்றால் என்ன அர்த்தம். வறுமையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிறது என்று வறுமையை தீர்த்துவிட்டதா ? எப்படி தீரும் ? 100 ரூபாயில் தீர்ந்துருமா ? ஒரு இட்லி எவ்வளவு ? 100 ரூபாயில் தீருமா, ஏன் இப்படி சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என சீமான் கூறினார்.

Categories

Tech |