பெரம்பலூரில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.