Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்குமேல் இவரை நம்பினால் சரிப்பட்டு வராது”…. சூர்யா எடுத்த அதிரடி முடிவு…!!!!!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம்வருபவர்  சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது இயக்குனர் பாலா  இயக்கத்தில் நடித்துவருகின்றார்.

பிதாமகன் படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் பாலா இருவரும்  இணைவதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.ஜில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா  இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைதிருக்கின்றது. இந்நிலையில் சூர்யா இயக்குனர் பாலா படத்திற்கு பிறகு வெற்றிமாறன்  இயக்கத்தில் வாடிவாசல்  படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக  அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிசியாக உள்ளதால் படப்பிடிப்பு தாமதமாகிறது. இந்நிலையில் சூர்யா வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வருகின்றது.

இவர்கள் கூட்டணியில் கடந்தாண்டு OTT யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய்பீம்  படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைய இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.மேலும் இவர்கள் இணையவுள்ள இப்படம் குறுகிய காலகட்டத்திற்குள் எடுத்து முடிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரசிகர்கள் இத்தகவலை கேட்டு ஏதிர்பார்பில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |