Categories
உலக செய்திகள்

“இதற்கான சந்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்”… கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கான உரிமைகள் தடுக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் ஒழிய வேண்டும் என அந்த நாட்டு பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் அதிகரித்து  வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுப்பதற்கு கனடா பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக கூறியுள்ளார்.

இதுபற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைக்கான தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இதற்கான  அர்த்தம் என்னவென்றால் இனி கனடாவில் இயங்கும் கைத்துப்பாக்கியை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. வேறு விதமாக தெரிவித்தால் கைத்துப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து ஒருவர் மீது ஒருவர் சுடும் துப்பாக்கிகளின் தனிநபர் விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. நகர்புறங்களில் துப்பாக்கி குற்றங்கள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கைத்துப்பாக்கிகள் சம்பந்தப்பட்டவை துப்பாக்கி வன்முறை தொடர்ந்து இங்கே அதிகரித்துக் கொண்டே வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மக்கள் பல்பொருள் அங்காடி பள்ளி அல்லது அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அச்சமின்றி செல்லவேண்டும் தவறான தோட்டாவினால்  என்ன நடக்கும் என்பதைப் பற்றி மக்களின் கவலை படாமல் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |