இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின், அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. இதனால் இலங்கை ரூபாயின்மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வெளி நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால் இலங்கையில் எரிப்பொருள் தட்டுப்பாடுடன், தினமும் பல மணிநேரம் மின்வெட்டும் நீடித்து வருகிறது.
இதனிடையில் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களை இலங்கை அதிபரான கோட்டபய ராஜபக்சே சந்தித்தார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை கோட்டபய ராஜபக்சே சந்தித்தது இதுவே முதன் முறையாகும். இந்த சந்திப்பின்போது நாட்டை மீண்டும் கட்டமைக்க நாம்அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதற்காக ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் அந்த தலைவர்களுக்கு கோட்டபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.