Categories
மாநில செய்திகள்

இதற்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்… எடியூரப்பா விளக்கம்…!!!

எனக்கு முதல்வராக இருக்க வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது “ஜூலை 26ஆம் தேதி நான் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். கர்நாடகாவில் அரசு பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அமைச்சராக நாட்டின் எந்த மூலையிலும் வாய்ப்பளிக்கவில்லை. எனக்காக அந்த விதியை தளர்த்தி இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருப்பதற்கு வாய்ப்பளித்த மோடி அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோருக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |