Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதய நோயால் மனவுளைச்சல்…. காவலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இதயநோயால் அவதிப்பட்ட காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எடுத்துள்ள கொப்பையம்பட்டி பகுதியில் வசித்து வந்த சேகர் என்பவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகருக்கு இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து இதயநோய் இருப்பதை அறிந்து மன உளைச்சலில் இருந்த சேகர் வாழ்வில் விரக்தியடைந்து அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து சேகர் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |