Categories
லைப் ஸ்டைல்

இதயம், கல்லீரலை காக்கும் அற்புத பழங்கள்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

அதிக உடல் பருமன் உள்ளவர்கள் இதயம் மற்றும் கல்லீரல் காக்க இந்த பழங்களை எடுத்துக்கொண்டால் நன்மை பயக்கும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் அதிலும் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நாம் அதை கவனிப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் சில பழங்களை எடுத்துக் கொள்வதால் நன்மை கிடைக்கும்.

அவ்வாறு ஆரஞ்சு, எலுமிச்சை, கமலா பழம் மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகை பழங்களை அதிகம் சாப்பிட்டால் இதய நோய்கள் மற்றும் கல்லீரல் நோய்கள், நீரிழிவு பாதிப்புகள் தடுக்கப்படுவதாக பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் நிறைந்த விட்டமின், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நோய்கள் உண்டாகும் சூழ்நிலையை தடுத்து ஆரோக்கியத்தை காக்கின்றன. அதனால் இந்தப் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

Categories

Tech |