Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்தை பலப்படுத்த …இதை குடித்து பாருங்கள்….!!

அறுகம்புல்லை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம்.

ஆனைமுகம் பெருமானுக்கு பக்தர்கள் அதிகம் அணிவிப்பது அருகம்புல் மாலை தான். “ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு விட்டு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவதில் இருந்து அருகு என்பது அருகம்புல்லை குறிக்கிறது.

“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பதற்கு இணங்க தலையில் உண்டாகும் பேன், பொடுகு தொல்லை நீங்க, குளிர்ச்சியாக அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்கவும். இதே எண்ணெயை உடலில் தேய்த்து குளித்துவர அணைத்து விதமான தோல் நோய்களும் குணமாகும்.

அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதில் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கி சிறுநீர்பை பலப்படும்.

அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி இதயமும் ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

அருகம்புல்லுடன் மஞ்சளும் ,சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச் சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும் வீக்கமும் குறையும்.

Categories

Tech |