பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே (67) இருந்தார். இவர் நேற்று நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் உறுப்பினராக இருந்த யகாமி (41) என்பவர் தான் வீட்டில் தயாரித்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்தார். அதன் பின் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் திடீரென அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் அபே மீது 2 குண்டுகள் பாய்ந்தது. இந்த துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அபேவுக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அபேவின் இதயம் மற்றும் தமனி சேதமடைந்து உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார். அவர் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5:03 மணிக்கு உயிரிழந்தார். இந்த தகவலை நாரா மருத்துவமனை பல்கலைக்கழகத்தின் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவின் தலைவர் ஹைட்டடா புகுஷிமா வெளியிட்டுள்ளார்.