ஒரு குழந்தையின் மிக முக்கியமான உறவு அவர்களுக்கு உயிர் கொடுத்த பெற்றோர்தான். இது உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அழகான நிபந்தனையற்ற உறவுகளில் ஒன்றாகும். அந்த வகையில், தந்தை-மகள் பாசத்தின் மனதைக் கவரும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களின் ஒரு பகுதியினர் இது மிகவும் நாடகத்தன்மையுடன் இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் மகளின் கால்களை தண்ணீர் மற்றும் பாலில் கழுவுவதை வீடியோவில் காணலாம். பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இந்த வீடியோவை வைரலாக்கியது. வீடியோவில், தந்தை தனது மகளின் கால்களை தண்ணீரால் கழுகி பின்னர் பாலில் கழுவுவதை தொடர்ந்து, அவர்கள் அந்தப் பாலை அருந்துவதும் இதில் உள்ளது. பின்னர் தந்தை தனது மகளின் கால்களை ஒரு துணியால் துடைத்து, அவளது கால்களை சிவப்பு வண்ணப்பூச்சு நிரப்பப்பட்ட ஒரு தட்டில் வைத்து, அவளது கால்தடங்களுடன் ஒரு வெள்ளை துணியில் நடக்கச் சொன்னார். மிகவும் உணர்ச்சிவசமான இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் ‘இதயத்தைத் தொட்ட தருணம்’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.