Categories
மாநில செய்திகள்

இதனால் தமிழகத்திற்கு ஆபத்து….? பட்டியலிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள். மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைதரி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம் என அனைத்தும் பாதிக்கப்படும். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |