ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரம் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 27 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது.
தற்போது உயர்ந்துள்ள ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. ஏனென்றால் அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள் தான் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த பேருந்துகளை சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு தொழில். அதன் உரிமையாளர்கள் பாதிப்பு வராத வகையில் தான் கட்டணம் நிர்ணயம் செய்வார்கள். எனவே இன்னும் ஒரு சில நாட்களில் கட்டண விவரம் வெளியாகும் என அதில் கூறியுள்ளார்.