கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளனர். மேலும் பல வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது. களக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாததால் அறுவடை பருவம் முடிந்தும் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் இருக்கின்றது.இதைப்போல் இன்னும் சிறிது நாட்கள் மழை பெய்தால் நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகிவிடும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். எனவே கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.