ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பிமங்கலம் மெயின் ரோட்டில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் ஒரு நோயாளியை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டுள்ளார். இதனை அடுத்து கடலூருக்கு செல்வதற்காக வாகனத்தை இடது புறமாக திருப்பியுள்ளார்.
அப்போது எதிரே வந்த சதீஷ் என்பவர் வளைவில் திரும்பும் போது இண்டிகேட்டர் போட மாட்டியா? என கூறி சரவணனுடன் தகராறு செய்துள்ளார். மேலும் சதீஷ் பிளாஸ்டிக் குழாய் வைத்து சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சரவணன் தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சதீஷை கைது செய்தனர்.