Categories
தேசிய செய்திகள்

இண்டர்நெட் இன்றி பணப்பரிவர்த்தனை…. எப்படின்னு தெரியுமா?… இதோ ஈஸியான டிப்ஸ்….!!!

ஒருசில இடங்களில் இணையம் இல்லையெனில் UPI பேமெண்ட் மூலம் மட்டுமே பணம் செலுத்த காத்திருப்பவர்களின் நிலைமையானது கஷ்டமாகிவிடும். எனினும் உங்களது மொபைலில் இண்டர்நெட் இல்லை என்றாலும் பணப் பரிவர்த்தனையை செய்யமுடியும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகள் வாயிலாக இணையம் இன்றி எப்படி பணம் செலுத்த முடியும்..? என நீங்கள் யோசிக்கலாம். அதற்கு ஈஸியான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். அதாவது, மொபைல் டேட்டா (அ) இணையம் இன்றி இருக்கும் போது நீங்கள் USSD சேவையைப் பயன்படுத்தவேண்டும்.

இதற்கு முதலாவதாக உங்களது ஸ்மார்ட் போனில் * 99 # என்பதை டயல் செய்யவேண்டும். அப்போது நீங்கள் ஒரு பாப்-அப் மெனுவினை பார்பீர்கள். அவற்றில் உங்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு விருப்பங்களில் “பணம் அனுப்பு” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தற்போது ​​UPI ஐடி, வங்கிக்கணக்கு விபரங்கள் மற்றும் மொபைல் எண்ணுடன் பணத்தை அனுப்புவதற்குரிய விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இங்கு இருந்து கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து, தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்தபின், நீங்கள் எவ்வளவு செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிட வேண்டும். அதன்பின் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் UPI பின்னை உள்ளிட்டு பணத்தை மாற்றவேண்டும். இவ்வழியில் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து இணையம் இன்றி UPI வாயிலாக பணம்செலுத்த முடியும்.

Categories

Tech |