இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் வாயிலாக பல்வேறு வழியிலும் மோசடிகள் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி வங்கி குறித்த தகவல்களை தெரிந்துகொண்டு வங்கி பணத்தை திருடுகின்றனர். இவ்வாறு இணைய வாயிலாக பணத்தை திருடும் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் இணைய மோசடிகளால் பணம் திருடப்படுவதை தடுப்பதற்காக மத்திய அரசு 155260 என்ற தேசிய உதவி எண்ணை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்போடு இந்த உதவி எண் செயல்படுகிறது. இந்த உதவி எண் தற்போது ஏழு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. மற்ற மாநிலங்களில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.