Categories
மாநில செய்திகள்

இணையவழி கல்வி கற்றல்… மாணவர்களுக்கு விழிப்புணர்வு…!!!

புதுச்சேரி காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில் ராயன்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா பேசினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம், பாதுகாப்பான இணைய வழி கல்வி கற்றலுக்கான வழிமுறைகள் குறித்து பூவம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் விளக்கினார்.

கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Categories

Tech |