பேட்மேன் படத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஆக்ஷன் காட்சியை யாரோ திருடி இணையத்தில் வெளியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பேட்மேன் படத்தின் புதிய பாகம் வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்று இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேட் ரிவ்ஸ் இயக்கிய இந்த படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் இப்படத்தில் உள்ள முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை யாரோ திருடி இணையத்தில் வெளியிட்டனர்.
இந்த காட்சியில் ஒருவரது இறுதிச்சடங்கில் பேட்மேனாக நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சன் கலந்து கொண்டிருப்பார். அப்போது அங்கு கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் பலர் படுகாயம் அடைகிறார்கள். பின் அந்த காரில் இருந்து முதியவர் ஒருவர் இறங்குகிறார்.அவரே மனித வெடிகுண்டாக இருக்கிறார். அதற்கான ரிமோட் வில்லனிடம் இருக்கிறது. மேலும் அவரது உடையில் டு தி பேட்மேன் என எழுதப்பட்டுள்ளது.
இந்த காட்சிதான் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்குமாம். இது வெளியாகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. இப்போது படக்குழுவே இந்த காட்சியின் தெளிவான பிரின்ட்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் இந்த காட்சியை வைத்து படத்தை விளம்பரப்படுத்த போவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.