Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணையத்தளத்தில் வெளியானது எப்படி….? அதிகாரி பணியிடை நீக்கம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவேஇணையதளத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12 ” ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அந்த தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளங்களில் பரவுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை குழு  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து  இணையத்தளத்தில் வெளியாயானது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருவண்ணாமலைக்கு விரைந்து சென்ற பள்ளிக் கல்வித்துறை குழு அங்குள்ள பள்ளிகளில் தீவிர விசாரணை நடத்திள்ளனர். அந்த விசாரணையில் வந்தவாசி, போளூர் பகுதிகளில் இருக்கும் இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் வினாத்தாள்கள் இணையதளத்தில் பரவுகிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால்  இரண்டு பள்ளிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வத்தை அதிகாரிகள் பணியிடை  நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த ஆட்சியர் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்படும் வரை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவை கூடுதல் பொறுப்பு ஏற்க நிர்வாகத்தின் நலன்கருதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |