Categories
விளையாட்டு

இணையதளத்தில் வைரலாகும்… ” ஜூனியர் மீராபாய்” வீடியோ…!!!

ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கு மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வாங்கி பெருமை சேர்த்துள்ளார். பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் மீராபாய் சானு பளுதூக்கிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அப்படி ஒரு வீடியோவை பார்த்த தமிழ்நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் அதனை மறுஉருவாக்கம் செய்து அசத்தியுள்ளார். இந்த குழந்தை தமிழ்நாட்டின் வேலூரை சேர்ந்தவர் சதீஷ் சிவலிங்கத்தின் மகள் ஆவார். 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றிருந்தார். 2016 நடைபெற்ற போட்டியிலும் கலந்து கொண்டிருந்தார். அந்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு இதற்குப் பெயர்தான் இன்ஸ்பிரேஷன் என்று பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |