மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை நடைபெருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு ஜோதிரா சந்தியா தலைமையில் 28 எம்.எல்.ஏ -கள் விட்டு விலகியாதை அடுத்து கவிழ்த்தது. இதையடுத்து சிவரத்சிங்க் சவுகான் தலைமையிலான பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவையில் பெருமான்மை பெற 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசு 107 எம்.எல்.ஏ – களும் எதிர் கட்சியான காங்கிரசுக்கு 87 எம்.எல்.ஏ – களும் உள்ளனர். இந்நிலையில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.