ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை ரோடு, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை கால்வாயில் அடைத்ததால் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து ஓடியது. பகல் நேரம் வெயில் வாட்டி விதைத்த நிலையில், இரவு மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.