Categories
பல்சுவை

இசை பல கற்று… தனி முத்திரை பதித்தவர்… சீர்காழி கோவிந்தராஜன்…!!.

பக்தி பாடல்களினால் பலரது மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறு தொகுப்பு

பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு தேவார பாடலாசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தான் சொந்த ஊராகும். எளிய மிட்டாய்காரர் குடும்பத்தில் சிவசிதம்பரம் அவையாம்பார் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக ஜனவரி மாதம் 19ஆம் தேதி 1933ல் இவர்  பிறந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே நாடகத்துறையின் மீது கொண்ட நாட்டமும் இசையின் மீது கொண்ட ஈடுபாடும் அவரை கலைத்துறைக்கு ஈர்த்தது. தேவி நாடக சபாவில் இசை நாடக நடிகராக பாடி நடித்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் துணை நடிகராக மாதச் சம்பளத்தில் பணிபுரிந்து முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் போராடி படிப்படியாக முன்னேறினார்.

தமிழ் இசைக் கல்லூரியின் இசைமணி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று சென்னை மத்திய அரசு இசைக் கல்லூரியில் சங்கீத வித்வான் பட்டம் பயின்று தனது தகுதியை உறுதிபடுத்திக் கொண்டார். கர்நாடக சங்கீதம், இசை நாடக சங்கீதம், பக்தி இசை, மெல்லிசை, சினிமா இசை, திரை நடிப்பு, கிராமிய இசை என அனைத்திலும் தனது தனி முத்திரையைப் பதித்து சிறப்பு பெற்றார்.

Categories

Tech |