அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு வாஷிங்டன் டிசியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு ஓடிவிட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மர்ம நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் ஒரு போலீஸ் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். இதன் முதற்கட்ட அறிக்கையின்படி, உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.