Categories
சினிமா தமிழ் சினிமா

“இசைஞானியின் பாடல்கள் தான் எனக்கு தன்னம்பிக்கை” இயக்குனர் பா. ரஞ்சித் நெகிழ்ச்சி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் தற்போது காதல் கதை அம்சம் கொண்ட நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஷபீர், கலையரசன் மற்றும் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது நட்சத்திரம் நகர்கிறது என்ற படம் காதலை பற்றிய படமாகவும், காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிப்பிணைந்த ஒரு படமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

இப்போ காதலை ஒரு பொலிடிக்கல் டெர்மாக மாற்றி வைத்திருக்கின்றனர். இதைப் பற்றி விவாதிக்கிற படமாக தான் நட்சத்திரங்கள் நகர்கிறது இருக்கும். அதோடு ஒரு பாலின காதல் மற்றும் திருநங்கையின் காதல் பற்றியும் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு இசைஞானி இளையராஜாவிடம் நீங்கள் இணைவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித் இசைஞானியிடம் நெருங்குவதற்கு எனக்கு தயக்கமாக இருக்கிறது. அவருடன் இணைந்து வேலை பார்க்க முடியும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை. அவர் ஒரு சிறந்த மேதை. அவர் இல்லை என்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. மேலும் இசைஞானியின் பாடல்கள் தான் எனக்கு சினிமாவில் தன்னம்பிக்கை பாடல்களாக அமைந்தது எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |