பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் கல்வி அதிகாரி சசிகலா பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேற்று முன்தினம் முதல் அரசு பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது. வருகின்ற 23-ஆம் தேதி வரை இந்த செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த செய்முறை தேர்வு இரண்டாவது நாளான நேற்றும் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் அரசு தேர்வு மையங்களில் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.