சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மண்பானைகள் தாகம் தீர்க்க தயார் நிலையில் உள்ளது.
மே மாதம் என்றாலே கோடைகாலம்
தொடங்கிவிடும். ஆனால் இந்த மாதமே கோடைகால வெயில் ஆரம்பித்துவிட்டது. அடிக்கிற வெயிலுக்கு அனைவரும் தண்ணீரை அதிகமாக தேடுகிறோம். அதிலும் குளிர்ந்த நீர் வெயிலுக்கு இதமாக இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண் பானைகளுக்கு பிரசித்தமான இடமாகும்.
ஏராளமான தொழிலாளர்கள் இங்கு இந்த தொழிலையே நம்பி உள்ளனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் தாகம் தீர்க்க மண்பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான பானைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது.