பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சாத்தூர், கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட தாயில்பட்டி, மூர்த்தி நாயகன்பட்டி, குகன்பாறை, சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, கிருஷ்ணாபுரம், சானாகுளம், தூங்காரெட்டியார்பட்டி, நாரணாபுரம், வெள்ளையாபுரம், பந்துவார்பட்டி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டில்லோன்வபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகம் தடைசெய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.