Categories
தேசிய செய்திகள்

“இங்கு மாஸ்க் அணிய அவசியமில்லை என்ற சூழல் உருவாகும்”…. பிரமோத் சாவந்த்…..!!!!!

கொரோனா காலகட்டம் தொடங்கியதிலிருந்து மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றனர். அண்மை நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், டெல்லி, மராட்டியம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவுகள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் கோவா மாநிலத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவு வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக அந்த மாநில முதல் மந்திரியான பிரமோத்சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது “இங்கு கூடியவிரைவில் முகக்கவசம் அணிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |