கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், நாடிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்று கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பது தெரியவந்தால் கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதே போல் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் இருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.