Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு நின்று சத்தம் போடாதீர்கள்…. தாய் மகனுக்கு நடந்த கொடூர சம்பவம்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

தாய் மற்றும் மகனை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சப்பாவூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று சுந்தரி வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தினகரன், அருண்குமார், வேணுகோபால் என்ற 3 பேர் சத்தம் போட்டுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு வெளியே வந்து சுந்தரி எனது  வீட்டு வாசலில் நின்று சத்தம் போடாதீர்கள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் சுந்தரியை திட்டியுள்ளனர்.

இதனை பார்த்த விஜயன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து சுந்தரி மற்றும் விஜயனை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுந்தரி, விஜயன் ஆகிய  2  பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினகரன், அருண்குமார், வேணுகோபால் ஆகிய 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |