கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் காரணமாக கர்நாடக அரசு அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக கோவா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா பரவல் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் கோவா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் இல்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது. ஆனால் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ்களை மட்டும் வைத்திருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.