இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடந்தது வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ்பின்ஷர் செயல்பட்டு வந்தார். சென்ற புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இருஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின் பழமைவாத கட்சி எம்.பி. பதவியிலிருந்து கிறிஸ் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் கிறிஸ் மீது, பிரதமரான போரிஸ்ஜான்சன் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே அந்நாட்டு நிதிமந்திரியான ரிஷி சுனக், சுகாதாரத் துறை மந்திரியான சஜித்ஜாவித் போன்றோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் நதீம் சஹாவி நிதி மந்திரியாகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார மந்திரியாகவும் செயல்படுவார் என்று பிரதமர் போரிஸ்ஜான்சன் அறிவித்துள்ளார்.