நாட்டை வழிநடத்தும் பொறுப்பிலுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சன் மீது தங்களுக்கு இனிமேல் நம்பிக்கையில்லை என கூறி அந்த நாட்டின் நிதியமைச்சர் பதவியிலிருந்து ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதன் காரணமாக போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தமானது அதிகரித்தது.
இப்போது தொடர் ராஜினாமாவாக சென்ற 48 மணிநேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ்ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பின் அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார். அக்டோபரில் நடைபெறும் கட்சிமாநாட்டில் புது பிரதமர் தேர்ந்தெடுக்கபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.