இங்கிலாந்து பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் நீதி மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போன்றோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல் தபால் ஓட்டு மூலமாக வாக்களிக்க இருக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த 2019 ஆம் வருடம் தேர்தலில் முதன்முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்த வாக்காளர்களிடம் ரிஷி ஆதரவு பெற்று இருக்கின்றார். மொத்தம் 4,946 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ரிஷி ஒட்டுமொத்த நிகர சாதகமான மைனஸ் 30 மதிப்பெண்களை கொண்டிருக்கிறார். அதே நேரம் ட்ரஸ்ஸின் நிகர சாதகத் தன்மை மைனஸ் 32 ஆகும். இதன் மூலமாக டிரஸ்சை விட ரிஷி சற்றே முன்னிலையில் பெற்றிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.