அகமதாபாத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி 375 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது இந்நிகஸில் 135 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. இதனில் இந்திய அணியானது இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஏற்கனவே நடந்த 3ஆவது போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றதால் மைதானம் சரியாக இல்லை எனவும், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதாகவும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் குறை கூறியுள்ளனர். எனவே 4-வது போட்டியின் மைதானமும் இப்படித்தான் இருக்குமென்று விவசாய நிலத்தின் புகைப்படத்தை வெளியிட்டு கேலி செய்திருந்தனர்.
இந்தநிலை நான்காவது போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது. இதற்கு பலரும் இந்திய அணிக்கு வாழ்ந்து தெரிவித்து, மைதானத்தை கிண்டலடித்துவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் மூளை புகைப்படத்தை வெளியிட்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்கவில்லை. இது தான் தோற்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்டத்தை சரியாக ஆடாமலும் மைதானத்தை குறை கூறிக் கொண்டு இருந்ததால் இங்கிலாந்து அணி தோல்வியுற்றதாக சேவாக் கேலிக்கூத்து செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Congratulations Team India on an awesome Test Series victory.
England didn't lose it in Ahmedabad.
They lost it here .#INDvsENG pic.twitter.com/NXb1AxCHen— Virender Sehwag (@virendersehwag) March 6, 2021